மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மயிலின் முட்டையை எடுத்த நபர்.! நொடியில் தண்டனை கொடுத்த ஆண் மயில்.! வைரல் வீடியோ.!
மனிதர்களை காட்டிலும் விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு உணர்வுகள் அதிகம் என்பதை பலரும் அறிந்திருப்போம். விலங்குகளிடமும் பறவைகளிடமும் நாம் அன்பாக பழகினால், அவையும் நம்முடன் அன்பாக பழகும். ஆனால், அவற்றை வெறுப்பேற்றினால் விளைவு பெரிதாக இருக்கும். இணையத்தில் இதுபோன்ற காட்சிகளை நாம் பார்த்திருக்கிறோம்.
இந்தநிலையில், தற்போது இதுபோன்று ஒரு வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு ஆண் மயிலும் பெண் மயிலும் இருக்கும் சமயத்தில் அங்கு ஒரு நபர் வருகிறார். அவர் மயிலின் முட்டைகளை எடுக்க முயற்சிக்கிறார்.
அப்போது நொடிப்பொழுதில் ஆண் மயில் பறந்துவந்து அந்த நபரைத் தாக்குகிறது. மயிலின் திடீர் தாக்குதலால் அந்த நபர் ஆடிபோய் அங்கேயே விழுந்துவிடுகிறார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.