மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இதெல்லாம் டீயுடன் சேர்த்து சாப்பிடவே கூடாது.. சாப்பிட்டால் இந்த பிரச்சனைகள் ஏற்படலாம்.?
இந்தியாவில் டீ என்பது ஒரு தேசிய பானம் என்பது போல் நாம் அனைவரும் நினைத்த நேரத்தில் டீ குடிக்கும் பழக்கத்தை கொண்டுள்ளோம். காலை எழுந்தவுடன் ஒருமுறை, சோர்வாக இருந்தால், நண்பர்களுடன் இருந்தால் டீ குடிப்பது என்பது காரணமே இல்லாமல் டீ குடிக்கும் பழக்கம் இங்கு உண்டு.
நாம் டீ குடிக்கும் நேரத்தை பொறுத்து அதன் விளைவுகளும் இருக்கும். காலையில் தூக்கத்தை விரட்டும் டீ, மாலையில் ஒரு சக்தியை தருகிறது. அதுவே மதியம் வயிற்றை லேசாக்கும். ஆனால் டீயுடன் நாம் தெரிந்தோ, தெரியாமலோ நாம் உட்கொள்ளும் உணவுகள் நம் ஆரோக்கியத்தை பாதிக்கும்.
அவற்றை இங்கு பார்ப்போம். லெமன் டீ பலரது விருப்பமாக உள்ளது. ஆனால் இது வயிறு தொடர்பான பிரச்சனைகளை உண்டாக்கும். டீயில் உள்ள காபின் லெமனில் உள்ள வைட்டமின் சி யுடன் இணைந்து வயிற்று எரிச்சல் பிரச்சனையை உண்டாக்கும்.
மேலும் டீயுடன் மஞ்சள் கலந்த ஏதாவது உணவை உட்கொண்டால் உடல்சூடு. வாயுத்தொல்லை உருவாகும். மேலும் டீயுடன் எண்ணையில் பொறித்த உணவுகளை உட்கொண்டால், ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சப்பட்டு வயிற்று வலி, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.