மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடர்த்தியான கூந்தலைப் பெற நாள் ஒன்றுக்கு எத்தனை உலர் பழங்கள் சாப்பிட வேண்டும்.? வாங்க தெரிஞ்சுக்கலாம்.!
உலர் பழங்களில் இருக்கும் சத்துக்களால் முடிநீளமாகவும் அடர்த்தியாகவும் வளரும். ஒரு நாளைக்கு எத்தனை நட்ஸ் சாப்பிட்டால் நம் முடி வளர்ச்சிக்கு உதவும் என்பதை இந்த பதிவில் காணலாம்.
முடி உதிர்தல் என்பது எல்லா வயதினரும் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சனையாகும. இப்போ உள்ள உணவு முறை, காற்று மாசுபாடு, வேற வேற ஊர்ல உள்ள தண்ணி இதெல்லாம் யூஸ் பண்றதுனால 20-25 வயசிலேயே முடி கொட்டி வழுக்கை விழ ஆரம்பிக்குது. விழுந்த முடி வளரத்துக்கு நம்ம சாப்பாட்டு முறையை கொஞ்சம் சேஞ்ச் பண்ணாலே போதும் வாங்க அந்த மாதிரி டிரை நட்ஸ் சாப்பிடுவதால் ஏற்படுற பயன்களை பார்க்கலாம்.
பாதாமில் பயோட்டின் நிறைந்துள்ளது. இது ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. பயோட்டின் முடியின் வேர்களை பலப்படுத்துகிறது மற்றும் முடி உடைவதை தடுக்கிறது. பாதாமில் வைட்டமின் ஈ உள்ளது. இது உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.நாள் ஒன்றுக்கு 4 முதல் 5 பாதாம் பருப்புகளை சாப்பிட வேண்டும். வெறுமையாக சாப்பிடுவதை காட்டிலும் முதல் நாளே நீரில் ஊற வைத்து, மறுநாள் காலை வெறும் வயிற்றில் சாப்பிடவும். காலை சாப்பிட மறப்பவர்கள், மாலை நேரத்தில் சாப்பிடவும்.
வால்நாட்ஸ் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்தது. இது முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. ஒரு நாளைக்கு சுமார் 6 முதல் 8 சிறிய அக்ரூட் பருப்புகளை சாப்பிடுங்கள். காலை உணவுக்கு பின்பு இதை எடுத்து கொள்வது நல்லது. இவை தவிர முந்திரியில் முடி வளர்ச்சிக்குத் தேவையான புரதம் நிறைந்துள்ளது. ஒரு நாளைக்கு 5 முதல் 8 முந்திரி எடுத்துக் கொள்ளுங்கள். முந்திரியில் அதிக கலோரிகள் இருப்பதால், அதிக அளவு முந்திரி சாப்பிடுவது எடையை அதிகரிக்க செய்யும். முந்திரி எடுத்து கொண்டால் அதற்கேற்ப உணவில் புரதத்தின் அளவை சற்று குறைத்து கொள்ளுங்கள்.