"தக்காளி சாற்றில் இத்தனை அற்புதங்கள் இருக்கிறதா!?" என்னென்ன தெரியுமா.?
நாம் சாப்பிடும் உணவுகள் தான் நம் உடல் ஆரோக்கியத்தை வரையறுக்கின்றன. நம் தினசரி உணவில் தவறாமல் இடம்பெறும் உணவுப்பொருள் தான் தக்காளி. இது உடல் மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு பெருமளவில் உதவுகிறது.
காலையில் எழுந்த வெறும் வயிற்றில் இந்த தக்காளியின் சாற்றை குடிப்பதன் மூலம், உடலின் ph அளவு சமநிலையாகும். இது ஒரு இயற்கை நச்சு நீக்கியாகும். ஆரோக்கியமான குடலை பராமரிக்க உதவுகிறது. செரிமான அமைப்பை சுத்தப்படுத்த உதவுகிறது.
இதிலுள்ள நார்ச்சத்து மலச்சிக்கலை தடுக்கிறது. செரிமானத்தை தூண்டுகிறது. மேலும் எடைக்குறைப்புக்கு உதவுகிறது. மேலும் வெறும் வயிற்றில் தக்காளி சாறை குடிப்பது ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சப்படுகிறது. இது குறைவான கலோரிகளைக் கொண்ட ஒரு உணவுப்பொருளாகும்.
ஆனால் தக்காளியில் ஏராளமான நார்ச்சத்துக்கள் உள்ளன. உடலில் உள்ள நச்சுக்களை நீக்குவதில் இந்த தக்காளி சாறு பெரும்பங்கு வகிக்கிறது. ஏதேனும் ஒவ்வாமை பிரச்சனை இருந்தால் மருத்துவரை கலந்தாலோசித்த பிறகு இந்த தக்காளி சாற்றை வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்ளலாம்.