மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பியூட்டி பார்லரில் பெண்ணை வீடியோ எடுத்து மிரட்டி பலாத்காரம் செய்த 3 பேர் கைது
கொல்கத்தாவில் ஒரு நபருடன் உல்லாசமாக இருந்ததை அவரது நண்பர்கள் வீடியோவாக எடுத்து, வெளியில் விட்டு விடுவதாக மிரட்டி தொடர்ந்து கற்பழித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொல்கத்தாவில் தில்ஜாலா பகுதியில் உள்ள ஒரு பியூட்டி பார்லரில் பணி புரியும் அந்த முதலாவது குற்றவாளி பாதிக்கப்பட்ட பெண்ணை தொடர்புகொண்டு பியூட்டி பார்லருக்கு வரவழைத்துள்ளார். அந்த பெண்ணை அந்த முதலாவது நபர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை அங்கு மறைந்திருந்த அவரது நண்பர்கள் 2 பேர் வீடியோ எடுத்துள்ளனர்.
பின்னர் அந்த வீடியோவை அந்த பெண்ணிடம் காண்பித்து தொடர்ந்து அவர்களது ஆசைக்கு இணங்காவிட்டால் வீடியோவை இணையத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியுள்ளனர். இதனால் பயந்த அந்தப் பெண் வேறுவழியில்லாமல் அந்த மூவரின் ஆசைக்கும் இணங்கியுள்ளார்.
அன்று ஒரு நாளோடு அவர்கள் இந்த பெண்ணை விட்டுவிடவில்லை. தொடர்ந்து அந்த பெண்ணை மிரட்டி வந்துள்ளனர். அடிக்கடி அதே பியூட்டி பார்லருக்கு அந்த பெண்ணை வரவழைத்து தொடர்ந்து பலாத்காரம் செய்துள்ளனர்.
இவர்கள் கொடுத்த தொடர் தொல்லையால் விரக்தி அடைந்த அந்த பெண் கடந்த வெள்ளிக்கிழமை அன்று அந்த மூவரைப் பற்றியும் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்த காவல் துறையினர் அந்த பெண் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளது உண்மை என்பதை அறிந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து அந்த மூவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர்கள் வைத்திருந்த அந்த வீடியோவை காவல்துறையினர் கைப்பற்றினர்.