இனி சிரிப்புக்கு பஞ்சமில்லை.. விஜய் டிவியில் வருகிறது ரசிகர்களின் பேவரைட் ஷோ.! வைரல் வீடியோ!!
கொய்யா பழத்தில்.. மணக்க மணக்க சட்னி செய்து பாருங்கள்.. அசத்தலான சுவை.!
வருடம் முழுவதும் மலிவு விலையில் கிடைக்கும் கொய்யாவின் பலன்களை நாம் முழுமையாக அறிந்திருக்கவில்லை. நான்கு ஆரஞ்சில் கிடைக்கும் வைட்டமின் சி ஒரு கொய்யாவில் உள்ளது. இதில் உள்ள லைகோபீன் (Lycopene), ஆன்ட்டிஆக்சிடென்ட்கள், கரோட்டின் (Carotene) மற்றும் நீர் சத்துக்கள் நம் சரும பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கின்றது. முகப்பரு, கரும்புள்ளிகள், தோலின் கருமையான திட்டுகள் மறையவும் உதவுகிறது. சருமத்தை மிளிரச் செய்கிறது.
மேலும் புற்றுநோயை தடுக்கும் ஆற்றலும் கொய்யாவிற்கு உள்ளது. நீரிழிவு நோயாளிகளுக்கு இது ஒரு வரப்பிரசாதமாகும். இதில் உள்ள ஃபோலிக் ஆசிட் (Folic acid) கர்ப்பிணிகளுக்கு நல்ல பலன்களை தருகிறது. விதையுடன் கொய்யாவை உண்ணும் போது மலச்சிக்கல் குணமாகிறது.
பெரும்பாலும் கொய்யாவை வெறும் பழமாகவோ, அல்லது உப்பு மற்றும் மிளகாய்த்தூள் சேர்த்து சாப்பிடும் நாம், இப்போது புதிய சுவையில் கொய்யாவை சட்னியாக செய்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
கொய்யா - 1
கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி
உளுந்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - 1
வர மிளகாய் - 3
புளி - சிறிதளவு
கருவேப்பிலை - சிறிதளவு எண்ணெய் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தாளிப்பதற்கு: கடுகு மற்றும் கருவேப்பிலை
செய்முறை:
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, சீரகம், கடலைப்பருப்பு, உளுந்து சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். பின்பு வெட்டி வைத்து பெரிய வெங்காயம் மற்றும் வரமிளகாய் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். இப்போது கொய்யாவை சிறு துண்டுகளாக நறுக்கி வாணலியில் சேர்க்கவும். விதையுடன் உண்ண விரும்பாதவர்கள் விதையை நீக்கியும் சேர்க்கலாம். பின்பு புளி சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும். இதனை ஆற வைத்து பின்பு மிக்ஸியில் உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைக்கவும். அரைத்த சட்னியில் கடுகு மற்றும் கருவேப்பிலை தாளித்து சேர்க்கவும். இது இட்லி, தோசையுடன் சாப்பிட சுவையாக இருக்கும். கொய்யாவை உண்ண மறுக்கும் குழந்தைகளும் இந்த சட்னியை விரும்பி சாப்பிடுவார்கள்.