சிம்பிளாக நடந்து முடிந்த பிக்பாஸ் பிரதீப் திருமணம்.! பொண்ணு யார் தெரியுமா?? வைரலாகும் புகைப்படம்.!
2024 தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ் கட்சி காணாமல் போகும்!: அமித்ஷா பரபரப்பு பேச்சு..!
இமாசலபிரதேசம் மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை ஒட்டி, ஹமிர்பூர் மாவட்டம், நடான் கஸ்வா தொகுதியில் பா.ஜனதா வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்த உள்ளதுறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது:-
லட்சக்கணக்கான மக்களை கொரோனா தொற்று பரவலில் இருந்து காப்பாற்றியது, பா.ஜனதா அரசுகள்தான். பிரதமர் மோடியின் சீரிய முயற்சியால், உள்நாட்டிலேயே தடுப்பூசி தயாரித்து, மக்கள் அனைவருக்கும் இலவசமாக வழங்கப்பட்டது. இந்த காலகட்டத்தில் வேறு எந்த நாட்டிலும் உள்ள எந்த தலைவரும் இத்தகைய சாதனையை செய்தது இல்லை.
முன்னதாக அதிக விலை கொடுத்துவெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்த பொருட்களை எல்லாம், இப்போது உள்நாட்டு நிறுவனங்களே தயாரிக்கின்றன. அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. வரும் 2024 ஆம் ஆண்டு ராமர் கோவில் திறக்கப்படும். பிரதமர் மோடி பக்திமான் என்பதால், வாரணாசி, கேதார்நாத், பத்ரிநாத் மற்றும் அயோத்தி பகுதிகளில் அமைந்துள்ள இந்து கோவில்களை மறுசீரமைப்பு பணிகளை செய்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்கள் முழுநேர பணியாக பொய் பேச தொடங்கியுள்ளனர். பொய்யான வாக்குறுதிகளை அளித்து, மக்களை முட்டாளாக்க காங்கிரஸ் கட்சி நினைக்கிறது. தேர்தல் முடிந்தவுடன் தனது வாக்குறுதிகளை அக்கட்சி மறந்து விடும். பா.ஜனதா கட்சி மட்டும்தான் தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றும்.
காங்கிரஸ் கட்சி ஒரு மூழ்கும் கப்பல். அதற்கு எதிர்காலம் இல்லை. 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல் முடிந்தவுடன், காங்கிரஸ் கட்சி அரசியல் அனாதை ஆக்கப்படும். ராகுல்காந்தி, தனது பாதயாத்திரை போவதாக கூறிக்கொண்டு, இங்கு வருவதை தவிர்த்து வருகிறார். அவர்களின் தீய நோக்கங்களுக்கு இரையாகிவிடாதீர்கள். உங்கள் எதிர்காலம் ஒளிமயமாக இருக்க வேண்டும் என்றால், பொய்யர்களை நிராகரியுங்கள் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.