தனக்கு ஆதரவாக அழகிரி இருப்பார் என்ற நம்பிக்கையுடன் அடியெடுத்து வைக்க தொடங்கும் ரஜினி !!



alagiri supports rajini

தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நலனை விசாரிக்கச் நடிகர் ரஜினிகாந்த்  நேற்று இரவு மருத்துவமனைக்குச் சென்றார். நடிகர் ரஜினிகாந்த்  அழகிரியுடன் தனியாக விவாதித்தது தி.மு.க வட்டாரத்தை உற்று கவனிக்க வைத்திருக்கிறது. 

'அழகிரியுடன் சில விஷயங்களை மனம்விட்டுப் பேசினார் ரஜினி. அரசியல் பிரவேசம் தொடர்பாகவும் சில நிமிடங்கள் விவாதித்தனர்' என்கின்றனர் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள். 

rajinikanth

மருத்துவமனையில் கருணாநிதியை ரஜினியால் சந்திக்க முடியவில்லை. ஸ்டாலினிடம் விசாரித்துவிட்டு, அடுத்ததாக அழகிரியை சந்தித்துப் பேசினார். ஸ்டாலினிடம் சரியாக பேசாத ரஜினி, அழகிரியிடம் தீவிரமான விவாதத்தில் ஈடுபட்டிருக்கும் படங்கள் வெளியாகியுள்ளது. 

rajinikanth

மருத்துவமனை நிகழ்வுகள் குறித்து பேசிய அழகிரி ஆதரவாளர் ஒருவர், ``மு.க.அழகிரிக்கும் ரஜினிக்கும் இடையில் நீண்ட கால நட்பு உண்டு. இளம் வயதில் இருந்தே அவருடன் தொடர்பில் இருக்கிறார் அழகிரி. சென்னையில் இருந்து மதுரைக்குச் சென்றபோதும், ரஜினியுடனான நட்பை மட்டும் அவர் விடவில்லை. துரை தயாநிதியின் திருமணத்துக்காக, மதுரைக்கே நேரில் வந்து வாழ்த்தினார் ரஜினி. ஒவ்வொரு விசேஷ தினங்களிலும் இருவரும் ஒருவருக்கொருவர் வாழ்த்து சொல்லிக் கொள்வதும் வழக்கமாக இருந்து வருகிறது. கடந்த டிசம்பர் மாதம், அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்தார் ரஜினி. இந்த அறிவிப்புக்குப் பிறகு கோபாலபுரத்தில் கருணாநிதியைச் சந்தித்து ஆசி வாங்கச் சென்றார் ரஜினி. இதை பிடிக்காத ஸ்டாலின், 'இது பெரியார் பிறந்த மண், ஆன்மிக அரசியலுக்கு இங்கே இடமில்லை' என நேரடியாக ரஜினியை விமர்சித்துப் பேசினார். இதையெல்லாம் கவனித்த அழகிரி, 'அரசியல் பிரவேசத்துக்கு வாழ்த்து சொல்வதில் என்ன தவறு இருக்கிறது, சென்னை செல்லும்போது ரஜினிக்கு நேரடியாக வாழ்த்து சொல்லப் போகிறேன்' என கூறினார்.

rajinikanth

நேற்று ரஜினியிடம் பேசிய அழகிரி, 'இனியும் நீங்கள் தாமதிக்க வேண்டாம். நம்பிக்கையோடு கால் எடுத்து வையுங்கள். தமிழக மக்கள் சாதி, மதங்களைத் தாண்டி உங்களை ஏற்றுக்கொள்வார்கள்' எனக் கூறியதாகவும் தகவல் வந்தது. இந்தச் சந்திப்பில் பேசப்பட்ட விஷயங்களை இருவரும் வெளியில் தெரிவிக்கவில்லை. விரைவில் போயஸ் கார்டன் வீட்டில் ரஜினியை சந்தித்துப் பேச இருக்கிறார் அழகிரி" என்றார் விரிவாக. 

இந்தச் சந்திப்பு குறித்து பேசிய ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி ஒருவர், ``ஆடி மாதம் முடிந்த பிறகு கட்சி தொடர்பான விஷயங்களில் தீர்க்கமான முடிவை எடுக்க இருக்கிறார் ரஜினி. அப்போது, அமைப்புரீதியாக சைதை துரைசாமி, அழகிரி போன்றவர்களின் பங்களிப்பு தனக்கு வேண்டும் எனவும் அவர் நினைக்கிறார். அந்த வகையில், 'தென்மாவட்டங்களில் தனக்குச் சாதகமாக அழகிரி இருப்பார்' எனவும் அவர் நம்புகிறார். இதற்கென தனியாக செயல் திட்டத்தையும் வகுக்க இருக்கிறார்