தமிழகத்தில் ஒரு குடும்பத்தின் கட்சி நடத்தும் ஆட்சி நடக்கிறது: குற்றச்சாட்டை அடுக்கிய அண்ணாமலை..!



Annamalai said that Tamil Nadu is ruled by a single family party

உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்க உள்ளதால் இது ஒரு குடும்ப கட்சியின் ஆட்சி என்பது உறுதியாகிறது என்று தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

திருச்சியில் நடைபெற்ற பா.ஜனதா மாநில இளைஞரணி செய்ற்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது

ஆன்லைன் விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்பதே எங்களது நிலைப்பாடு. உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த மாதம் கனிமொழியை துணை பொதுச்செயலாளராக நியமனம் செய்துள்ளனர். இதனால் நாங்கள் காலம் காலமாக கூறுவது போல் இது ஒரு குடும்ப கட்சி நடத்தும் ஆட்சி என்பது தெளிவாக தெரிகிறது.

பீகார் மாநிலத்தில் முதலில் லாலு பிரசாத் யாதவ், பின்னர் அவரது மனைவி ராப்ரிதேவி தற்போது அவரது மகன் தேஜஸ்வி யாதவ் என்று ஒரு குடும்பத்தினரே பதவியை அனுபவித்து வருகின்றனர். மக்கள் நலன் சாராத அரசியல் பயணம் கடைசியில் சூனியமாகிவிடும். இதற்கு மிகச் சிறந்த உதாரணம் லாலுவின் அரசியல் வாழ்க்கை. தி.மு.கவுக்கும் இது பொருந்தும் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.