ஆளும் தி.மு.க பா.ஜ.க-வை எதிர்கட்சியாக உருவாக்கியுள்ளது; தமிழகத்தை ஆளவேண்டும் என்பதே எங்களது இலக்கு: அண்ணாமலை அதிரடி..!
தமிழக அரசியலில் பிரதான எதிர்கட்சியாக பா.ஜ.க-வை மாற்றியதே தி.மு.க தான் என்று தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
பா.ஜ.க-வை தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியாக தி.மு.க மாற்றியுள்ளதாகவும், ஆனால் தமிழகத்தை ஆள வேண்டும் என்பதே தமிழக பா.ஜ.கவின் குறிக்கோளாக உள்ளதாகவும் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
சேலம் மாவட்டம், ஏற்காடு அருகேயுள்ள நாகநல்லூர் கிராமத்தில் தமிழக பா.ஜ.க சார்பில், மலைவாழ் மக்களுடனான கலந்தாய்வு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளாராக அக்கட்சியின் பாநில தலைவர் அண்ணமலை கலந்து கொண்டார்.
முன்னதாக மலைவாழ் மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட அண்ணாமலை விழாவில் சிறப்புரையாற்றினார், கூட்டத்தி கல்ந்து கொண்ட அண்ணாமலை பேசியதாவது:-
மலைவாழ் மக்களுக்காக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பா.ஜ.க-வை தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியாக தி.மு.க மாற்றியுள்ளதாகவும், ஆனால் தமிழகத்தை ஆள வேண்டும் என்பதே தமிழக பா.ஜ.கவின் குறிக்கோளாக உள்ளதாகவும் அண்ணாமலை பேசியுள்ளார்.