#Justin || பாஜக மாநில தலைவர்கள் நியமனம்..! தெலுங்கானா மாநில தலைவரானார் மத்திய அமைச்சர் கிஷான் ரெட்டி..!



bjp-leaders-announcement

பாரத ஜனதா கட்சியின் மாநில தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் தெலுங்கானா மாநில பாஜக தலைவராக மத்திய அமைச்சர் கிஷான் ரெட்டி நியமனம் செய்யப்பட்டுள்ளார். புரந்தேஸ்வரி ஆந்திர மாநில பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு. 

பஞ்சாப் மாநிலத்தின் தலைவராக சுனில் ஜக்கார் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. பின்னர், ஜார்கண்ட் மாநில தலைவராக முன்னாள் முதலமைச்சர் பாபுலால் மாராண்டி என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் மத்திய அமைச்சரவையில் மாற்றம் ஏற்படக்கூடும் என்று தகவல் வெளிவந்த நிலையில், பாஜக மாநில தலைவர்கள் நியமனம் அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.