மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பேசவே ஆளில்லாத சமஸ்கிருத மொழிக்கு மத்திய அரசு கோடி கோடியாய் செலவழிக்கிறது - கனிமொழி எம்.பி குற்றச்சாட்டு..!
மத்திய அரசு சமஸ்கிருதம் மொழி வளர்ச்சிக்கு கோடி கோடியாய் செலவு செய்வதாக தி.மு.க எம்.பி., கனிமொழி குற்றஞ்சாட்டியுள்ளார்.
சென்னை மடிப்பாக்கத்தில் பெரும்பிடுகு முத்தரையர் பிறந்தநாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தி.மு.க எம்.பி.,யும் அக்கட்சியின் மாநில மகளிர் அணி செயலாளருமான கனிமொழி பங்கேற்றார். நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய கனிமொழி பேசியதாவது:-
இங்குள்ளவர்கள் எங்கள் உரிமை, எங்கள் குரல் என பேசிக் கொண்டிருக்கிறார்கள், ஆனால் நாம் அனைவரும் ஒரே இனம். தமிழினம் என்பதுதான் நாம் அனைவரையும் இணைத்து வைத்திருக்கிறது. அதன் அடிப்படையிலேயே இதை விட பெரிய எதிரியை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கிறோம்.
தமிழ் மொழி தொன்மை வாய்ந்தது. மத்திய அரசு சமஸ்கிருதம் மொழி வளர்ச்சிக்கு கோடி கோடியாய் செலவு செய்துவருகிறது. ஆனால் சமஸ்கிருதத்தை பேச ஆள் இல்லை. கோவிலில் வேண்டுமென்றால் அந்த மொழியில் பூஜைகள் செய்யலாம், ஆனால் பேச ஆயிரம் பேருக்கு மேல் ஆளில்லை. தொன்மையும் தொடர்ச்சியும் இருக்கும் ஒரே மொழி தமிழ் மொழி. திமுக என்றைக்குமே ஓட்டு வங்கி அரசியல் செய்தது இல்லை. இவ்வாறு கனிமொழி பேசினார்.