மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அலைகடலென திரண்ட தொண்டர்கள்!! கதிர் ஆனந்திற்கு ஆதரவாக முதல்வர் தேர்தல் பிரச்சாரம்..
மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொண்டங்க இன்னும் சில வாரங்களே உள்ளநிலையில் வேலூர் மற்றும் அரக்கோணம் தொகுதி திமுக வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்வரும், திமுக தலைவருமான திரு. ஸ்டாலின் அவர்கள் பிரச்சாரம் மேற்கொண்டார்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ளநிலையில், திமுக, அதிமுக, பாஜக என அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்துவருகின்றனர்.
இந்நிலையில் வேலூர் மற்றும் அரக்கோணம் தொகுதி திமுக வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அலைகடலென திரண்டிருந்த தொண்டர்கள் மத்தியில் நெகிழ்ச்சி உரையாற்றிய முதல்வர், திமுக கட்சியின் மின்னலாக செயல்படும் அண்ணன் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்திற்கு உங்கள் வாக்குகளை பதிவு செய்து வெற்றிபெற செய்யுமாறு ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.
மேலும் தமிழகத்தில் திமுக அறிமுகம் செய்துள்ள பலத்திட்டங்கள் இந்தியாவிற்கே முன்னோடியாக இருப்பது மட்டுமில்லாமல், காலை உணவு திட்டம் தற்போது கனடா நாட்டிலும் கொண்டுவந்திருப்பதாகவும் உலகிற்கே தமிழகம் முன்னோடியாக திகழ்வதாகவும் பேசியுள்ளார்.
வேலூர் தொகுதியின் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்திற்கு ஏற்கனவே அந்த தொகுதி மக்களிடம் பெரிய வரவேற்பு உள்ளது. எம்.பி. தொகுதி நிதியிலிருந்து வேலூர் மாவட்டத்திற்கு சத்துவாச்சாரி சுரங்கப்பாதை கொண்டு வந்தது முதல் வேலூர் விமான நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு வருவது தொடர்பாக மக்களவையில் குரல் கொடுத்தது என அவரது சேவைகள் நீண்டுகொண்டே செல்கிறது.
இப்படி தொகுதி மக்கள் மத்தியில் ஆதரவு இருக்கும் அவருக்கு ஆதரவாக முதல்வர் இன்று பிரச்சாரம் மேற்கொண்டது கதிர் ஆனந்த்தின் வெற்றியை மேலும் உறுதி செய்யவதாக இருப்பதாக திமுக தொண்டர்கள் பேசிவருகின்றனர்.