35 நாட்கள்.. பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய சுனிதா உருக்கமாக போட்ட முதல் போஸ்ட்.!
தமிழக ஆளுநருக்கு உச்சகட்ட கண்டனத்துடன் எச்சரிக்கை விடுத்த திமுக எம்.பி..! திராவிடம் ன்னா சும்மாவா பாஸ்..!!
புத்தகத்தை வாசித்தாலே ஆளுநர் உண்மையை தெரிந்துகொள்ளலாம். தமிழ்நாடு ஆளுநர்கள் யாருமே சர்ச்சை கருத்துக்களை சொல்லியது கிடையாது. திராவிடர், ஆரியர் என அடையாளத்தை பிரித்து கூறியதே ஆங்கிலேயர்கள் தான் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தனது கருத்தை தெரிவித்து இருந்தார்.
இந்த விசயத்திற்கு திமுக பொருளாளர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர் பாலு பதிலாக அளித்துள்ள அறிக்கையில், "தமிழகத்திற்கு வந்து பணியாற்றிய ஆளுநர்கள் சர்ச்சை கருத்தை பொதுவெளியில் சொல்லியது இல்லை, அதில் சிக்கியது இல்லை என்று கூறும் இன்றைய ஆளுநரின் செயல்பாடுகள் அப்படி இல்லை.
சனாதனம் தொடர்பாக கூறிய சில கருத்துக்களை ஆளுநர் தெரிவித்தார். அதற்கான விளக்கத்தை திமுக சார்பில் நான் பதிலாக அளித்திருந்தேன். இந்த நிலையில் தான் திராவிடர் விவாதம் தொடங்கியுள்ளது. ஆங்கிலேயர்கள் ஆரியர், திராவிடர் என பிரித்ததற்கான அடையாளம் இல்லை. ஆரியர் - திராவிடர் குறித்த புத்தகத்தை மேலோட்டமாக வாசித்தாலே ஆளுநருக்கு உண்மை தெரியும்.
கடந்த 100 ஆண்டுகளாக திராவிட இயக்கத்தின் வரலாறு மறுக்க இயலாதது. திராவிடத்தின் வளர்ச்சியை பொறுக்க இயலாதவர்கள் திராவிடம் என்ற சொல்லை பார்த்தாலே மிரள்கிறார்கள். இதே பீதிதான் ஆளுநருக்கும். உண்மை பிரச்சனைகளை திசைதிருப்ப வேண்டாம். அரசியல் சாசனத்திற்கு எதிராக ஆளுநர் செயல்பட வேண்டாம்" என்று தெரிவித்துள்ளார்.