அதிமுக பொதுக்குழு வழக்கு.. ஆவலுடன் காத்திருந்த ஈபிஎஸ் தரப்பு.! மேல் முறையீட்டு மனு மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு.!



Eps cases adjourned

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூலை 11-ந்தேதி நடந்தது. இதில், ஓ.பன்னீர்செல்வத்தை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியும், எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனையடுத்து ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என்றும் அந்த பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் செல்லாது என அறிவிக்கக்கோரி ஓபிஎஸ் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கை விசாரித்த நீதிபதி  ஜூலை 11-ஆம் தேதி நடந்த பொதுக்குழு செல்லாது. 30 நாட்களுக்குள் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நிதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்தார்.

 இந்த மேல்முறையீட்டு வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இன்று நடைபெற்ற இறுதி விசாரணையில் எடப்பாடி பழனிசாமி தரப்பிலும் ஓ பன்னீர் செல்வம் தரப்பிலும் பல வாதங்கள் முன் வைக்கப்பட்டன. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.