மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
எடப்பாடி பழனிசாமி அறிவித்த அறிவிப்பு அந்த 3 பேருக்கு மட்டும் பொருந்தாது.!!
அதிமுகவில் மீண்டும் இணைய வேண்டும் என்றால் மன்னிப்பு கடிதம் கொடுத்தால் அதிமுகவில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். மேலும், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டவர்கள் பொதுச் செயலாளர் பழனிசாமியை நேரில் சந்தித்து மன்னிப்புக் கடிதம் வழங்கவேண்டும் என்று நேற்று தெரிவித்திருந்தார்.
இதனால், கட்சியின் குறிக்கோள் மற்றும் கோட்பாடுகளுக்கு எதிராக செயல்பட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுவது வழக்கம் என்று பழனிசாமி அதில் தெரிவித்திருந்தார்.
தற்போது, ராயப்பேட்டையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், அதிமுக ஆட்சியில் தமிழகம் அமைதி பூங்காவாக இருந்தது. தற்போது திமுக ஆட்சியில் அமளி பூங்காவாக மாறியுள்ளது. பெட்ரோல் குண்டு கலாச்சாரம் தலைத்தூக்கியுள்ளது, இதனால் ஆளும் கட்சி எம்.எல்.ஏ.வுக்கே பாதுகாப்பு இல்லாத சூழல்இருக்கும் போது சாதாரண குடிமக்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும்? என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், நேற்று எடப்பாடி வெளியிட்டிருந்த அறிவிப்பில், கட்சியில் மீண்டும் சேர்த்துக் கொள்ள மன்னிப்பு கடிதம் வேண்டும் என்று தெரிவித்திருந்தார். ஆனால் அந்த அறிவிப்பு ஓ.பி.எஸ், டிடிவி, சசிகலாவுக்கு பொருந்தாது. அதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான் முடிவு செய்வார் என்று பேசியிருந்தார்.