திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
8 ஆண்டுகளாக பாஜகவால்.... வார்ரூமில் தலைமை உத்தரவின் பேரில் நடந்த கொடுமை - நடிகை காயத்ரி ரகுராம் பரபரப்பு ட்விட்.!
தான் கடந்த 8 ஆண்டுகளாக பாஜகவில் இருந்தாலும், தன்னைப்பற்றி வார்ரூமில் இருந்து தலைமையின் உத்தரவின் பேரில் தவறான தகவலை பரப்பியோரின் மீதே எனக்கு கோபம் தவிர பாஜக தேசிய தலைவர்கள் மீது இல்லை என காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.
நடிகையும், அரசியல்வாதியும் என கடந்த 3 ஆண்டுகளாக பரபரப்புடன் பேசப்பட்ட நடிகை காயத்ரி ரகுராம். இவர் பாஜகவில் இருந்து கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியேறி, தமிழ்நாடு பாஜகவின் உண்மை நிலையை மக்களுக்கு அம்பலப்படுத்துவேன் என ஆட்பறித்தார். தான் பாஜகவில் இருந்து விலகியதற்கான காரணமாக பல பரபரப்பு தகவல்களையும் அவர் முன்வைத்தார்.
இந்த நிலையில், அவரின் ட்விட்டர் பக்கத்தில், "நான் 8 ஆண்டுகள் பாஜகவால் வளர்க்கப்பட்டேன். எனது அரசியல் பயணத்தில் பாஜகவும், மோடி-ஜியும் முக்கிய பங்கு வகித்தனர். நான் கட்சியை விட்டு வெளியேறினாலும், எனக்கு பிடித்த தலைவர்கள் மீதான எனது மரியாதை அப்படியே உள்ளது. இப்போது நான் சுதந்திரமாக இருக்கிறேன், உண்மையையும் உரிமையையும் பேசுவேன்.
என்னைப் பற்றி வார்ரூம் மூலம் தவறான செய்திகளைப் பரவி தூண்டி, என் புகைப்படத்தை மார்பிங் செய்து, பிளாக் மெயில் செய்து மிரட்டியவர்கள் மீதுதான் எனக்குக் கோபம். அத்தகைய மலிவான கதாபாத்திரங்கள் எப்போதும் என் தலைவராக இருக்க முடியாது. சில தலைவர்கள் இதுபோன்ற மோசமான செயல்களை ஊக்குவித்தார்கள் மற்றும் கண்டிக்கவில்லை. அந்த வகையில் TNBJP கூட எனக்கு துரோகம் செய்தது" என தெரிவித்துள்ளார். இந்த தகவல் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
என்னைப் பற்றி வார்ரூம் மூலம் தவறான செய்திகளைப் பரவி தூண்டி, என் புகைப்படத்தை மார்பிங் செய்து, பிளாக் மெயில் செய்து மிரட்டியவர்கள் மீதுதான் எனக்குக் கோபம். அத்தகைய மலிவான கதாபாத்திரங்கள் எப்போதும் என் தலைவராக இருக்க முடியாது. சில தலைவர்கள் இதுபோன்ற மோசமான செயல்களை ஊக்குவித்தார்கள்
— Gayathri Raguramm 🇮🇳 (@Gayatri_Raguram) February 3, 2023