சமூகநீதிக்கான கட்சி ஒன்று உண்டு என்றால், அது பா.ஜ.கதான்: அண்ணாமலை திட்டவட்டம்..!



If there is one party that maintains social justice, it is the BJP

சமூக நீதியை காப்பாற்றும் கட்சி என்று ஒன்று உண்டென்றால் அது பா.ஜ.க தான் என்று மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து மாற்றுக்கட்சியினர் பாரதிய ஜனதா கட்சியில் இணையும் விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு அக்கட்சியின் திருவாரூர் மாவட்ட தலைவர் ச.பாஸ்கன் தலைமை வகித்தார். மாவட்ட பார்வையாளர் பேட்டை சிவா, மாநில செயற்குழு உறுப்பினர் கோட்டூர் எம்.ராகவன், மாவட்ட பொதுச்செயலாளர்கள் செல்வம், செந்தில்அரசன், ராஜேந்திரன், சித்தமல்லி ரமேஷ், மாவட்ட துணைத்தலைவர் ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த விழாவின் போது கட்சியில் இணைந்த அனைவரையும் வரவேற்று  பேசிய பா.ஜ.க மாநிலத்தலைவர் அண்ணாமலை, அம்பேத்கர் 1951 ஆம் ஆண்டில் பண்டித ஜவகர்லால் நேரு தலைமையில் சட்ட அமைச்சராக இருந்தார். ஆங்கிலேயே அரசு சட்டம் மற்றும் நீர் மேலாண்மை பொறுப்புகளை அம்பேத்கருகு வழங்கியிருந்தது.

நேரு ஆட்சியில் அம்பேத்கர்க்கு சட்ட அமைச்சர் பதவி மட்டுமே வழங்கப்பட்டது. நேரு அமைச்சரவையில் நீர் மேலாண்மை பொறுப்பு வழங்க வேண்டும் என அம்பேத்கர் கோரிக்கை வைத்தார். பட்டியலினத்தை சேர்ந்தவர்களுக்கு கேபினட்டில் சாதாரண பொறுப்புகளை மட்டுமே கொடுப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார்கள்.

பிரதமர் நரேந்திர மோடி பட்டியலினத்த சேர்ந்தவர்களுக்கு கட்சியிலும் ஆட்சியிலும் முக்கிய பதவிகளை வழங்கியுள்ளார் . குறிப்பாக ராம்நாத் கோவிந்த் அவர்களை ஜனாதிபதி ஆக்கியுள்ளார். சமூக நீதியை காப்பாற்றும் கட்சி பா.ஜ.க தான். தமிழகத்தில் சமூக நீதி பற்றி தி.மு.க பொய் பேசி வருகிறது.

பட்டியிலன மக்களுக்கு பா.ஜ.க செய்துள்ள உண்மையை பற்றி நாங்கள் பேசி வருகிறோம். அம்பேத்கருக்கு துரோகம் செய்தவர்கள் காங்கிரஸ் கட்சியினர் தான். அம்பேத்கரை இந்திய அரசியல் சாசன தலைவராக பரிந்துரை செய்தது ஜன சங்கம் என்று அவர் பேசினார்.