அதிமுகவில் விலகி திமுகவில் ஐக்கியம்; மாஸ் காட்டும் அமைச்சர் செந்தில் பாலாஜி.!



infront of DMK Minister SEnthil Balaji AIADMK WOrkers Join DMK 


மின் வளத்துறை & மதுவிலக்குத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, ஊழல் & முறைகேடு வழக்கில் கைதாகி சுமார் 470 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். அதனைத்தொடர்ந்து, ஜாமினில் வெளியே வந்த செந்தில் பாலாஜிக்கு, தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின், மீண்டும் அமைச்சர் பொறுப்பை வழங்கினார். 

திமுகவில் இணைப்பு

மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்ற செந்தில் பாலாஜி, மாற்றுக்கட்சியினரை திமுகவில் இணைக்கும் பணியில் மும்மரமாக தீவிரமாக ஈடுபட்டு வந்தார். பல கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகளும் அடுத்தடுத்து திமுகவில் இணைந்தும் வருகின்றனர். 

கட்சி மாறினர்

இதனிடையே, கரூர் அதிமுக முன்னாள் துணைச் செயலாளர் காளியம்மாள், எம்.ஜி.ஆர் மன்றத்தின் துணைச் செயலாளர் ராமு, மகளிரணி நிர்வாகி மைதிலி, கரூர் மேற்கு நகர வர்த்தக அணி துணைத்தலைவர் உட்பட பலரும் அதிமுகவில் இருந்து தங்களை விலக்கி, அமைச்சர் முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக்கொண்டனர்.

இதையும் படிங்க: தமிழ்நாடு முதல்வராக உதயநிதி ஸ்டாலின்; நடிகர் கருணாஸ் புகழாரம்.!