திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அண்ணாமலை பாணியில் பாஜகவில் இணைந்த முன்னாள் காவல் அதிகாரி..!
தமிழ்நாடு பாஜக தலைவர் முன்னிலையில் முன்னாள் காவலர் பாஜகவில் இணைந்தார்.
2024ல் பாராளுமன்ற தேர்தல், 2026ல் தமிழக சட்டப்பேரவை தேர்தல் என அரசியல் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத ஆண்டுகளாக 2023 அமைந்துள்ளது. எதிர்வரும் தேர்தலை சந்திக்க தற்போதில் இருந்து அரசியல் கட்சிகள் வியூகம் வகுத்து செயலாற்றி வருகிறது.
தமிழ்நாட்டில் பாஜக தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ள தேவையான பல்வேறு விதமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பல கட்சிகளை சேர்ந்தோரும், தங்களை அடுத்தடுத்து பாஜகவில் இணைத்து வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று பல்வேறு கட்சியை சேர்ந்த 100 பேர் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணையும் நிகழ்வு நடைபெற்றது.
அப்போது, அண்ணாமலையின் பாணியில் கடந்த 15 ஆண்டுகளாக காவல் துறையில் பணியாற்றி வந்த திருமாவளவன் என்பவர், தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அவர் செய்தியாளர்களிடையே பேசுகையில், பாஜகவின் செயல்பாடு என்பது எனக்கு பிடித்துள்ளது. பாஜகவின் கொலை, செயல்பாடு, அண்ணாமலை அவர்களின் செயல்பாடு எனக்கு பிடித்துள்ளது. இதனாலேயே பாஜகவில் இணைத்துள்ளேன்" என தெரிவித்தார்.