Toxic: யாஷ் பிறந்தநாள் கொண்டாட்டம்.. டாக்சிக் படத்தின் அசத்தல் கிலிம்ப்ஸ் வீடியோ.!
எடப்பாடி பழனிசாமிக்கு உடல்நலக்குறைவு; சட்டப்பேரவைக்கு வருகை தரவில்லை..!
2025 ம் ஆண்டுக்கான தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர், நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் என்பதால், ஆளுநர் உரையுடன் கூட்டத்தொடர் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆளுநர் வெளியேறினார்
ஆனால், தமிழ்நாடு அரசு நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து நிறைவுபெற்றதும், தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என்று கூறி ஆளுநர் அவையில் இருந்து வெளியேறினார். இதனால் ஆளுநர் உரை சபாநாயகரால் வாசிக்கப்பட்டு, ஆளுநர் உரையை வாசிக்காமல் வெளியேறியதற்கு கண்டனம் தெரிவித்து தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
இதையும் படிங்க: "தப்பு இருக்குது, பயம் இருக்குது" - எடப்பாடி பழனிச்சாமி பாய்ச்சல்.!
எடப்பாடி பழனிச்சாமி வரவில்லை
இந்நிலையில், சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான இன்று, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேரவைக்கு வருகை தரவில்லை. நேற்று அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர் ஓய்வில் இருக்கிறார்.
இதையும் படிங்க: #Breaking: அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராக கோவை சத்யன் நியமனம்; அதிமுக தலைமை உத்தரவு.!