மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சாதிய பாகுபாடுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை உதாரணமாக காட்டிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!!
சென்னை: செய்தியாளர்கள் சந்திப்பில் இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பதிலளித்திருந்தார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு திடமாக பதில் ஒன்றை அளித்திருந்தார்.
அதாவது, சாதிப் பாகுபாடுகள் ஒழிக்கப்பட வேண்டிய நடைமுறைகளுக்கு ஏதாவது உதாரணம் சொல்ல முடியுமா? என்று கேள்வி எழுப்பப்பட்டது அதற்கு பதிலளித்த தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,
“புதிய நாடாளுமன்றக் கட்டிடத் திறப்பு விழாவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அழைக்கப்படவில்லை, அதுவே சிறந்த தற்போதைய உதாரணம்” என்று கூறியிருந்தார்.