மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஓ.பி.எஸ்., டிடிவியை விட எடப்பாடி பழனிச்சாமி தான் சிறந்த அடிமை; உதயநிதி ஸ்டாலின் பேச்சு.!
2024ல் பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதை தொடர்ந்து, காங்கிரஸ் உட்பட பல மாநில இடதுசாரி கட்சிகள் இரண்டு ஆலோசனை கூட்டத்தை நடத்தி ஆட்சியை பிடிக்க ஏற்பாடுகள் செய்து வருகிறது.
ஆளும் கட்சியாக இருக்கும் பாஜக தரப்பு தனது தரப்பு கூட்டணிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறது. இந்த நிலையில், உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அவர் பேசுகையில், "தேசிய ஜனநாயக கூட்டணியின் தென்னிந்திய பிரதிநிதியாக எடப்பாடி பழனிச்சாமி இருக்கிறார். அவரைத்தவிர வேறு யாரையும் கூப்பிட முடியாது.
மோடியின் அடிமையாக அவர் மட்டுமே செல்வார். ஓ.பன்னீர் செல்வம் & டிடிவி தினகரன் ஆகியோரில் நான் தான் சிறந்த அடிமை என எடப்பாடி பழனிச்சாமி வெற்றி அடைந்துள்ளார்" என தெரிவித்தார்.