மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காங்கிரஸ் கட்சியும், பாரதிய ஜனதா கட்சியும் தமிழ்நாட்டுக்கு தேவையில்லாத ஆணிகள்,..சீமான் ஆவேசம்..!
செய்யாத குற்றத்திற்கு 31 ஆண்டுகள் செய்யாத குற்றத்திற்கு சிறையில் இருந்த பேரறிவாளன் தான் தியாகி என சீமான் கூறியுள்ளார்.
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகமான ராவணன் குடியில் நாம் தமிழர் கட்சி சார்பாக தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்டத்தில் உயிர் இறந்தவர்களின் 4ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி உயிர் இழந்தவர்களின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினார்கள். பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சீமான், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது வாகனத்தில் ஏறி நின்று துப்பாக்கியால் குறி பார்த்து சுடுவதற்கு யார் அனுமதி கொடுத்தது என்று முன்னாள் முதல்வரிடம் கேட்ட போது எனக்கு அதை பற்றி தெரியாது நானே தொலைகாட்சியில் பார்த்ததுதான் தெரிந்து கொண்டேன் என்று கூறுகிறார் என்று கூறினார்.
மேலும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் இறந்தவர்களுக்கு வணக்கம் செலுத்துவதற்கு கூட தூத்துக்குடியில் அனுமதி கிடைக்கவில்லை . அவர்கள் உயர் தியாகம் செய்ததை வீணாகாமல், அந்த ஆலை மீண்டும் திறக்காமல் இருக்க நாங்கள் போராடுவோம்.
ராஜீவ் காந்தியை விடுதலைப் புலிகள் தான் கொன்றார்கள் என நான் பேசவில்லை. நாங்கள் கொல்லவில்லை என்று தொடர்ந்து கூறிய போது கண்டு கொள்ளாதவர்கள் நாங்கள்தான் கொன்றோம் என்று கூறியதும் அதை கவனித்தார்கள் அவர்கள் கவனிக்கவே அப்படி கூறினேன்.
காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் அரசியல் செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும். எங்களை படிக்க வைத்தது தாத்தா காமராஜர். ஆனால் எங்களை குடிக்க வைத்தது காங்கிரஸ் கட்சி. அதிகமானவர்கள் கல்வி பெற்ற மாநிலம் கேரளா தான், அங்கே திராவிட ஆட்சியா னடக்கிறது. 7 தமிழர் விடுதலைக்கு திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி எடுத்த னடவடிக்கை ஒன்று சொல்ல முடியுமா?.
அண்ணாமலை மற்றும் அழகிரியை என்னிடம் விவாதத்திற்கு வர சொல்லுங்கள் , இதற்காக தான் பி.ஜே.பி தமிழ் நாட்டுக்கு தேவை , இதற்காக தான் காங்கிரஸ் தமிழ் நாட்டுக்கு தேவை என்று சொல்ல சொல்லுங்கள் என்றும் காங்கிரஸ் கட்சியும் பாரதிய ஜனதா கட்சியும் தமிழகத்திற்கு எதற்காக தேவை என்றும் கேள்வி எழுப்பினார்.