"அய்யோ திருமணமா.?! எப்பவுமே இல்ல" பொன்னியின் செல்வன் நடிகை.. பகீர் அறிவிப்பு.!
"பாஜக, அதிமுக, திமுக எல்லாம் இதற்கு நடுங்குகிறது." சீமான் பெருமிதம்.!
தமிழகத்தில் உண்மையான எதிர்க்கட்சி என்றால் அது நாம் தமிழர் கட்சி தான் என்று சீமான் பேசியுள்ளார்.
பாராளுமன்ற தேர்தல் தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் அதிமுக, பாஜக, திமுக ற்றும் நாதக என நான்கு முனை போட்டி நிலவுகிறது. பாஜக மற்றும் அதிமுக இரண்டும் ஒரே கூட்டணியில் இணையும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், இந்தமுறை, பாஜக தலைமையில் ஒரு புதிய கூட்டணி உருவாகியுள்ளது.
பாஜகவுக்கு ஆதரவாக இந்த கூட்டணியில் பாமக, தாமக, சமக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இணைந்துள்ளன. திண்டுக்கல் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடுகிறது. இந்த நிலையில், அவரை எதிர்த்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது, அவர், "பாஜக, அதிமுக மற்றும் திமுக என அனைத்து கட்சிகளும் என்னை எதிர்க்கின்றன. 10 பேர் ஒருவரை எதிர்க்கிறார்கள் என்றால் அவர் வளர்கிறார் என்று அர்த்தம். ஆனால், ஒரு கூட்டமே சேர்ந்து ஒருவரை எதிர்க்கிறது என்றால் அவர் வளர்ந்துவிட்டார் என்று அர்த்தம். தமிழகத்தில் பாஜக வளர்ந்து விட்டது. அதை பார்த்து அனைத்து கட்சியும் நடுங்குகிறது" என்று தெரிவித்துள்ளார்.