மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அதிமுக மதுரை மாநாடு குறித்து ஓ.பன்னீர் செல்வம் விமர்சனம்!!
அண்மையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மதுரையில் அதிமுக மாநாடு நடைபெற்றது. இதற்காக பல கோடி செலவு செய்து பிரம்மாண்டமான மேடை அமைக்கப்பட்டிருந்தது.
மாநாட்டிற்கு வருகின்ற தொண்டர்களுக்கு மூன்று வேலை உணவு என்று மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. ஆனால் மாநாட்டு முடிந்த அடுத்த கனமே சமூக வலைத்தளங்கள் மற்றும் செய்தித்தாள்களில் வலம் வந்தது அதிமுக மாநாட்டில் வீணடிக்கப்பட்ட உணவுகள் குறித்து தான்.
இது குறித்து உணவருந்தியவர்கள் கூறுகையில் மாநாட்டில் உணவு சரியில்லை. இதை எப்படி சாப்பிட முடியும்? என்று பலர் கேள்வி எழுப்பினர்.
இந்த நிலையில் பன்னீர்செல்வம் அவர்களிடம் செய்தியாளர்கள் அதிமுக நடத்திய மாநாடு குறித்து கேட்டுள்ளனர். அப்போது அவர் அதிமுக மாநாட்டில் புளியோதரை எப்படி இருந்ததோ அது போல தான் அந்த மாநாடும் இருந்தது என்று விமர்சித்துள்ளார்.