மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தங்கர் பச்சானுக்கு ஜோசியம் பார்த்தவர் கைது.! கடலூரில் காவல்துறை அதிரடி.!
கடலூர் மக்களவைத் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாமக தங்கார்பச்சான் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றார். பாஜக மற்றும் பாமக கட்சியினர் அவருடன் கலந்து கொள்கின்றனர். பிரச்சாரத்தின் போது வெயிலுக்கு இளைப்பாற வழியில் இருக்கும் ஒரு மரத்தடியில் ஒதுங்கிய போது அங்கு இருந்த கிளி ஜோசியர் ஒருவர் ஜோசியம் பார்த்துக் கொண்டிருந்தார்.
அதை பார்த்த தங்கர் பச்சான் இந்த தேர்தலில் வெற்றி பெறுவனா? என்று அவரிடம் ஆர்வமாக கேட்டுள்ளார். இதனை தொடர்ந்து கிளி ஜோசியர் அவருக்கு ஜோசியம் பார்த்துள்ளார். கிளியை கூண்டிலிருந்து இறக்கி விட்ட ஜோசியர் அதை வைத்து ஜோசியம் பார்த்து உங்களுக்கு வெற்றி நிச்சயம் என கூறி ஆசீர்வாதம் வழங்கினார்.
இதன் பின்னர், தங்கர் பச்சான் மகிழ்ச்சியாக வாகனத்தில் ஏறி மீண்டும் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் தங்கர் பச்சானுக்கு ஜோசியம் பார்த்தவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். கிளியை கூண்டில் அடைத்து வைத்து ஜோசியம் பார்ப்பது சட்டப்படி குற்றம் என்பதால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.