மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஓபிஎஸ் நிலைமையை நினைத்தால் வருத்தமாக உள்ளது - பீட்டர் அல்போன்ஸ்!
தமிழக முதல்வராக இருந்தவர், அதிமுகவின் இரண்டாவது இடத்தில் இருந்தவர் என்ற பெருமை பெற்ற ஓ. பன்னீர்செல்வம் சுயசியாக போட்டியிடும் நிலைமையை கண்டு எனக்கு வருத்தமாக இருக்கிறது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார்.
வரும் மக்களவை தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் இன்று ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் நவாஸ் கனிக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார்.
அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எனது நெருங்கிய நண்பரான ஓ பன்னீர்செல்வத்தின் நிலையை கண்டு எனக்கு வருத்தமாக உள்ளது. ஒரு காலத்தில் முதல்வராக இருந்தவர், அதிமுகவில் இரண்டாவது இடத்தில் இருந்தவர், தற்போது சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுகிறார்.
ஆனால், அதே நேரம் அவர் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்து இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. இதனால், ராமநாதபுரம் தொகுதியை பொறுத்தவரை திமுக கூட்டணி வேட்பாளர் நவாஸ் கனியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.