மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இப்படி ஒரு சோகத்திலும், முதல்வர் செய்த சிறப்பான செயல்! குவியும் பாராட்டுக்கள்!
பொதுவாக நம் வீட்டில் ஒரு சோகம் என்றால் எந்த ஒரு வேலையையும் பார்க்கமாட்டோம். இன்னும் சிலர் பக்கத்துக்கு வீட்டில் ஏதாவது ஒரு சோகம் என்றால் கூட தங்களது வேலையை மறந்துவிடுவார்கள். அந்த வகையில் தனது தாய் இறந்த சோகத்திலும் முக்கியமான கோப்புகளில் கையெழுத்து போட்டுள்ளார் புதுகை முதல்வர் நாராயணசாமி அவர்கள்.
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் தாயார் ஈஸ்வரியம்மாள், தனது சொந்த ஊரான பூரணாங்குப்பத்தில் வசித்துவந்தார். 96 வயதாகும் ஈஸ்வரி அம்மாளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், அரும்பார்த்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
இந்நிலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணம் கேட்க டெல்லி சென்றிருந்தார் முதலவர் நாராயணசாமி. தனது தாயார் இறந்த செய்திகேட்டதும் உடனே புதுச்சேரி திரும்பிய முதல்வர் தனது தாயாரின் உடலை பார்க்க சென்றார்.
அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் என அனைவரும் திரு. நாராயணசாமியின் தாயாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் வீட்டு வாசலில் நாற்காலி போட்டு அமர்ந்த அவர், அவசரக் கோப்புகளைப் பார்த்து அதற்கு கையெழுத்திட்டு அனுப்பினார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.