மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நான் பாஜகவில் இணைய அவர் தான் காரணம்! கவுதம் கம்பீர் விளக்கம்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் துவக்க ஆட்டக்காரர் கவுதம் கம்பீர் இன்று அருன் ஜெட்லி மற்றும் ரவிசங்கர் பிரசாத் முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். இவர் டெல்லியில் ஒரு நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லியைச் சேர்ந்த கவுதம் கம்பீர் கடந்த டிசம்பர், 2018 முதல் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அப்போதிருந்தே இவர் பாஜகவில் இணையவுள்ளார் என்ற செய்திகள் பரவ தொடங்கின.
இந்நிலையில் சில நாட்களாகவே சமூக பிரச்சனைகள் குறித்து சமூக வலைத்தளங்களில் பேசி வந்த கம்பீர் இன்று டெல்லியில் பாஜகவில் இணைந்தார். டெல்லியில் உள்ள 7 நாடாளுமன்ற தொகுதிகளில் ஒன்றில் இவர் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள கம்பீர், "பிரதமர் நரேந்திர மோடியில் எதிர்கால திட்டங்களால் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன். இந்த கட்சியில் இணைய மோடியின் செயல்பாடுகள் தான் காரணம். அவருடைய இந்த அணியில் இணைவது குறித்து பெருமைப்படுகிறேன்" என தெரிவித்துள்ளார்.
2011 ஆம் ஆண்டு இந்திய அணி உலக கோப்பை வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய கம்பீர், இந்தமுறை பாஜகவின் வெற்றிக்கு பெரிதும் கைகொடுப்பார் என்று பாஜகவினர் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.