"அய்யோ திருமணமா.?! எப்பவுமே இல்ல" பொன்னியின் செல்வன் நடிகை.. பகீர் அறிவிப்பு.!
"பெட்டி எங்கே இருக்கிறதோ அங்கு பாமக இருக்கும்" - பதிலடி கொடுத்த செல்லூர் ராஜு.!!
2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இந்தியாவில் நடைபெற இருக்கிறது. பதினெட்டாவது பொதுத் தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவு நடைபெறும் நாள் மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள் ஆகியவற்றை சில வாரங்களுக்கு முன்பு தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதன்படி தமிழகத்தில் வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது
இதனைத் தொடர்ந்து அரசியல் கட்சிகள் தீவிரமான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த தேர்தலில் அதிமுக மற்றும் பாமக கட்சிகள் ஒரே கூட்டணியில் பயணித்தது. இந்த வருட தேர்தலிலும் பாமக அதிமுகவுடன் கூட்டணி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில் பாஜகவுடன் இணைந்து தேர்தலை எதிர்கொள்கிறது. வர இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலில் 10 தொகுதிகளில் பாமக போட்டியிடுகிறது. இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள இரண்டு கட்சியைச் சேர்ந்தவர்களும் ஒருவரை ஒருவர் மாறி மாறி விமர்சனம் செய்து வருகின்றனர் .
இந்நிலையில் அதிமுக பற்றிய தனது கருத்தை பகிர்ந்து கொண்ட அன்புமணி ராமதாஸ் 1996 ஆம் வருடத் தேர்தலில் ஜெயலலிதா ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி இருந்தபோது பாட்டாளி மக்கள் கட்சி தான் அதிமுகவிற்கு தேர்தலில் உதவியது என கூறியிருக்கிறார் மேலும் 2019 ஆம் வருடம் பாமக ஆதரவு இல்லை என்றால் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் ஆகி இருக்க முடியாது எனவும் தெரிவித்தார். அன்புமணி ராமதாஸின் கருத்திற்கு அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கடுமையான பதிலடி கொடுத்திருக்கிறார்.
மதுரை தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்த பின் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த செல்லூர் ராஜு " அன்புமணி ராமதாஸ் பேச்சே எல்லாம் பெருசாக எடுத்துக் கொள்ள வேண்டாம் எனக் கூறினார். பாட்டாளி மக்கள் கட்சியினர் பேரம் பேசி எங்கு அதிக பணம் கிடைக்கிறதோ அங்கு கூட்டணி அமைத்திருக்கிறார்கள். அன்புமணி ராமதாஸின் மனைவி சௌமியா ராமதாஸ் போட்டியிடும் தொகுதியில் பூத் கமிட்டிக்கு கூட ஆட்கள் கிடைக்காமல் திண்டாடி வருகிறார்கள். இதுதான் அவர்களது கலா நிலவரம் என தெரிவித்தார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர் டாக்டர் ராமதாஸ் பாட்டாளி மக்கள் கட்சியை ஆரம்பித்த போது பல்வேறு வாக்குறுதிகளை வழங்கினார். ஆனால் எந்த வாக்குறுதியையும் அவர் இதுவரை கடைபிடித்ததாக தெரியவில்லை. நான் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என கூறினார். மேலும் தனது குடும்பத்தில் இருந்து யாரேனும் போட்டியிட்டால் தன்னை முச்சந்தியில் கட்டி வைத்து அடியுங்கள் என ராமதாஸ் கூறினார். இப்போது அவரது மருமகள் போட்டியிடுகிறார். கருணாநிதி குடும்பத்தில் நடப்பதை போல் தான் பாமகவிலும் வாரிசு அரசியல் நடக்கிறது என கடுமையாக விமர்சித்தார் செல்லூர் ராஜு.