மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Election2024: பாஜக-வில் இணைந்த நட்சத்திர பேச்சாளர்.!! வெற்றிக் களிப்பில் என்டிஏ கூட்டணி.!!
2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தலுக்காக இந்தியா தீவிரமாக தயாராகி வருகிறது. நடைபெற இருக்கும் 18-வது பாராளுமன்றத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய தீவிரமாக போராடி வருகின்றனர்.
மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதற்காக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி உள்துறை அமைச்சர் அமித் ஷா உட்பட பாஜகவின் முக்கிய தலைவர்களும் தீவிரமான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு ஒரு கட்சியிலிருந்து மற்றொரு கட்சிக்கு தாவுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆளும் பாரதிய ஜனதா கட்சியில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த முக்கிய தலைவர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து வருகின்றனர். சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் சீட் கிடைக்காத அதிருப்தி எம்பிக்கள் பலர் பாஜகவில் இணைந்தனர். இந்நிலையில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த நடிகரும் பிஜு ஜனதாதள கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான அனுபவ் மொகந்தி பாஜகவில் இணைந்திருக்கிறார்.
பிஜு ஜனதா தள கட்சியின் நட்சத்திர பேச்சாளரான இவர் கடந்த மாதம் 30ஆம் தேதி அந்த கட்சியில் இருந்து விலகினார் . இதனைத் தொடர்ந்து பாஜகவின் முக்கிய தலைவர்கள் முன்னிலையில் அனுபவ் மொகந்தி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து இருக்கிறார். வர இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலில் ஒடிசா மாநிலத்தில் வெற்றி பெற பாஜகவிற்கு இது மிகச் சிறந்த வாய்ப்பாக அமைந்திருக்கிறது.