மாணவ மாணவிகளே நீங்களும் அரசியலுக்கு வாருங்கள்: கனிமொழி எம்.பி அறைகூவல்..!



Students and girls, come to politics Kanimozhi MP call

மாணவர்கள் அரசியல் பேச வேண்டும் என தாம்பரம் கிறிஸ்தவ கல்லூரியில் நடந்த  விழாவில் கனிமொழி எம்.பி பேசியுள்ளார்.

சென்னையை அடுத்த தாம்பரம் பகுதியில் இயங்கிவரும் தனியாருக்கு சொந்தமான சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் மகளிர் மாணவ அமைப்பு தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் தி.மு.க மகளிர் அணி செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கலந்துகொண்டு மகளிர் மாணவ அமைப்பை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

பின்னர் கனிமொழி எம்.பி மாணவ, மாணவிகளிடையே பேசிகையில், மாணவர்களாகிய நீங்கள் அரசியல் வேண்டாம் என்று கூறினாலும், அரசியல் உங்களை விடாது. பொருளாதாரம், வேலை வாய்ப்பு, உரிமைகள் மற்றும் மாற்றங்கள் எனஅனைத்து காரணிகளையும் அரசியல் தான் தீர்மானிக்கிறது. அதனால் தான் மாணவர்கள் அரசியல் பேசவேண்டும். அரசியலில் ஈடுபடவேண்டும்.

அரசியலை மாற்றியமைக்க கூடிய திறமைகளை வளர்த்து கொண்டு மாணவர்கள் தெளிவு பெறவேண்டும். இதன் பொருட்டு இந்த பொன்னான வாய்ப்பை சென்னை கிறிஸ்தவ கல்லூரி உருவாக்கி கொடுத்தது பாராட்டத்தக்கது. இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, சென்னை கிறிஸ்தவ கல்லூரி முதல்வர் வில்சன், மகளிர் மாணவ அமைப்பு நிர்வாகிகள், பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.