மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஜெயிலில் கணவர்.. களமிறங்கிய கெஜ்ரிவால் மனைவி.. நாளை முக்கிய நகர்வு.!
மதுபான கொள்கையில் முறைகேடான வகையில் பண மோசடி செய்ததாக டெல்லி மாநில முதல்வராக இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட நிலையில் வழக்கு விசாரணைக்கு பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றார். அவரது, நீதிமன்ற காவலானது வரும் மே 7ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. நாட்டில் தற்போது 18 வது மக்களவைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் இதன் வாக்கு சேகரிப்பில் அவரால் ஈடுபட முடியவில்லை.
இத்தகைய நிலையில் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் பஞ்சாப், டெல்லி, ஹரியானா மற்றும் குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவார் என்று டெல்லி மாநில அமைச்சரும், அந்த கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான அதிஷி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கிழக்கு டெல்லி தொகுதியில் நாளை சுனிதா கெஜ்ரிவால் ரோடு ஷோ நடத்த உள்ளார் எனவும், அதற்கு மறுநாள் மேற்கு டெல்லியில் அவரது ரோடு ஷோ நடக்கும் எனவும் அதிஷி தெரிவித்து இருக்கிறார்.
டெல்லியில் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து ஆம் ஆத்மி கட்சி கூட்டணி வைத்து தேர்தலை எதிர்கொள்கிறது. டெல்லியின் மொத்த தொகுதிகளில் மேற்கு டெல்லி, கிழக்கு டெல்லி, நியூ டெல்லி, தெற்கு டெல்லி உள்ளிட்ட 4 இடங்களில் ஆம் ஆத்மி போட்டியிட உள்ளது. மீதமுள்ள வட மேற்கு டெல்லி, வடக்கு டெல்லி மற்றும் சாந்தினி சவுக் உள்ளிட்ட இடங்களில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.