மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திருவள்ளூரை கழக்கும் காங்கிரஸ் வேட்பாளர்!! யார் இந்த சசிகாந்த் செந்தில்
வரும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பாக திருவள்ளூர் (தனி) தொகுதியில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு முன்னாள் ஐஏஸ் அதிகாரியான சசிகாந்த் செந்திலுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் மாதம் மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தல் திருவிழாபோல் தற்போதில் இருந்தே களைகட்ட தொடங்கியுள்ளது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்துவருகிறது.
அந்தவகையில், திமுக - காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பாக திருவள்ளூர் (தனி) தொகுதியில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு முன்னாள் ஐஏஸ் அதிகாரியான சசிகாந்த் செந்திலுக்கு வழங்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் தொகுதியில் பெரிய வரவேற்பை பெற்றுள்ள இந்த சசிகாந்த் செந்தில் யார் தெரியுமா?
ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி:
சசிகாந்த் செந்தில் கர்நாடக கேடர் ஐஏஎஸ் அதிகாரி. தன் பணிக்காலத்தில் அவர் கர்நாடக மாநிலத்தில் சித்ரதுர்கா, ராய்ச்சூர் மாவட்டங்களில் ஆட்சியராகப் பணியாற்றியுள்ளார். பல்வேறு துறைகளிலும் பணியாற்றியுள்ளார். தனது பணிக்காலத்தில் திறம்பட செயலாற்றிய ஐஏஎஸ் அதிகாரி என்ற பெருமையை பெற்ற இவர் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள், தேவைகள் என்னவென்பது குறித்த ஆழமான, தெளிவான புரிதல் கொண்டவர்.
வெறும் 10 ஆண்டுகள் மட்டுமே ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியாற்றியிருந்தாலும் கூட பணிக்காலத்தில் இவர் ஆற்றிய சாதனைகள் ஏராளம். மக்கள் மத்தியில் மிகுந்த வரப்பேற்பை பெற்ற இவர் குடிமக்கள் பதிவேடு, குடியுரிமைச் சட்டம் போன்றவற்றுக்கு எதிராக குரல் கொடுத்து 2019-ஆம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்று தனது பதவியை ராஜினாமா செய்தவர் சசிகாந்த் செந்தில்.
காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்:
அதன்பின்னர் முழுநேர அரசியலில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு இவர், 2020-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். அவரது செயல்பாடுகள் மீது மிகுந்த நம்பிக்கை கொண்ட ராகுல், கர்நாடக சட்டசபைத் தேர்தல் வார் ரூம் இன் சார்ஜ் ஆக நியமித்து பெருமைப்படுத்தியுள்ளார். கட்சியின் கட்டளையை ஏற்று கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் வெற்றிக்கான பணியை கையில் எடுத்து திறம்பட முடித்தார்.
அவரது செயல்திறனை பெருமைப்படுத்தும் வகையில், சசிகாந்த் செந்தில் அக்கட்சியின் தமிழக ஒருங்கிணைப்பாளராக அண்மையில் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் வரும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பாக திருவள்ளூர் (தனி) தொகுதியில் போட்டியிடுவதற்கான வாய்ப்பும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.