"பச்ச துரோகம்" ஓட்டு போடுவது குறித்து விஜய் சேதுபதி.! தீயாக பரவும் வீடியோ.!



vijay-sethupathi-released-awarenes-about-voting

18வது மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடபெற உள்ளது. இதில், தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதனையடுத்து பாஜக, காங்கிரஸ், திமுக மற்றும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் மக்களவை தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ள விழிப்புணர்வு வீடியோ சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.

vijay sethupathi

அந்த வீடியோவில், ஒவ்வொரு தேர்தல் வரும் போதும், நம்முடைய ஒரு ஓட்டு என்ன மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது என்று அலட்சியமாக இருக்கின்றனர். ஆனால் அதையெல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு நமக்காக இல்லை என்றாலும் நம்முடைய எதிர்கால தலைமுறையினர்களுக்காக ஓட்டு போட வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஓட்டு போட காசு வாங்குவது எவ்வளவு பெரிய துரோகமோ, அதைவிட பச்ச துரோகம் ஓட்டு போடாமல் இருப்பது எனவும் நமக்கு யார் நன்மை செய்வார்கள், நம் நாட்டில் உள்ளவர்களுக்கு யார் நல்லது செய்வார்கள் என்பதை சந்தித்து வாக்களிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

vijay sethupathi

இதுவரை அரசியல் குறித்து பேசவில்லை என்றாலும் பரவாயில்லை இன்று முதல் தேர்தல் நடைபெறும் நாள் வரை அரசியல் குறித்து விவாதம் செய்து, அலசி ஆராய்ந்து உங்களுக்கு யார் நல்ல தலைவர் என்று தோன்றுகிறதோ அவர்களுக்கு ஓட்டு போடுங்கள் எனவும் ஆனால் ஓட்டு போடாமல் மட்டும் இருந்து விடாதீர்கள் என கூறியுள்ளார்.