மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மீண்டும் இந்திய அணியில் ரவி சாஸ்திரிக்கு வாய்ப்பு! சந்தோஷத்தில் ரசிகர்கள்!
தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி இருக்கின்றார். அதேபோல் பந்துவீச்சு பயிற்சியாளராக பரத் அருண், பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர், பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோர் இருந்துவருகின்றனர். இந்தநிலையில் இவர்களின் பதவி காலம் உலகக் கோப்பை தொடருடன் முடிவடைகிறது.
ஆனால் இந்திய அணி அடுத்த மாதம் மேற்கிந்திய தீவுகள் அணியுடன் மோதுகிறது. இருப்பினும் அடுத்த மாதம் நடக்கும் தொடருக்காக அவர்களது பதவி காலம் 45 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதிய பயிற்சியாளர் தேர்வுக்கான விளம்பரத்தை இந்திய கிரிக்கெட் வாரியம் விரைவில் வெளியிட இருக்கிறது.
இதற்கிடையே, தற்போதைய இந்த தேர்வுக்கு ரவி சாஸ்திரியை விண்ணப்பிக்குமாறும் இந்திய கிரிக்கெட் வாரியம் கேட்டுக்கொண்டுள்ளதாம். இதனால் அவர் மீண்டும் தலைமை பயிற்சியாளர் ஆக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
இதற்கு முன்னர் பயிற்சியாளர் பதவியில் இருந்து அனில் கும்ப்ளே விலகியதை அடுத்து, ரவி சாஸ்திரி கடந்த 2017 ஆம் ஆண்டு தலைமை பயிற்சியாளர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.