மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இந்திய அணியை நடுங்கவைத்த ஜேம்ஸ் ஆண்டர்சன்.! முக்கிய வீரர்கள் அபேஸ்.!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 578 ரன்கள் எடுத்தது இங்கிலாந்து அணி. இதனையடுத்து இந்திய அணி அணைத்து விக்கெட்டுகளையும் இழந்து 337 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்தநிலையில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 241 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை துவங்கியது.
இந்திய அணியின் சிறப்பான பந்து வீச்சால் இங்கிலாந்து அணி 178 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனையடுத்து 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியில் ரோகித் சர்மா 12 ரன்களில் ஆட்டமிழந்தார். நேற்றைய ஆட்ட நேர முடிவில் சுப்மன் கில் 15 ரன்களும், புஜாரா 12 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
4 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 1 விக்கெட் இழப்புக்கு 39 ரன்கள் எடுத்தது. இன்றைய ஆட்டத்தில் புஜாரா 15 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். சுப்மன் கில் அரை சதமடித்து ஆடிய நிலையில் ஜேம்ஸ் ஆண்டர்ஸன் ஓவரில் போல்டாகி வெளியேறினார். அடுத்ததாக களமிறங்கிய ரஹானேவும் ஆண்டர்ஸன் பந்துவீச்சுக்கு போல்டாகி டக் அவுட்டானார்.
அடுத்ததாக களமிறங்கிய ரிஷப் பன்ட் ஜேம்ஸ் ஆண்டர்ஸன் ஓவரில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதனையடுத்து களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர் டக் அவுட் ஆனார். இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளரான ஆண்டர்சன் இந்திய அணியின் முக்கிய 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியை மிரளவைத்துள்ளார். தற்போது களத்தில் விராட் கோலியும், அஸ்வினும் ஆடி வருகின்றனர். இந்தியா 6 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்துள்ளனர்.