மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"ஒரு நல்லது ஒரு கெட்டது" மிகப்பெரிய பின்னடைவுடன் இந்தியாவை எதிர்கொண்டு சமாளிக்குமா இங்கிலாந்து?
நாளை நடைபெற இருக்கும் இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான பரபரப்பான ஆட்டத்தில் இங்கிலாந்து அணியின் முக்கிய வேகப்பந்துவீச்சாளர் சோப்ரா ஆச்சர் விளையாடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இந்த உலகக் கோப்பை தொடரில் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இருந்து வருகிறது இங்கிலாந்து அணி. உலக கோப்பையை ஏற்று நடத்தும் இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறுமா என்பதே கேள்விக்குறியாக இருந்து வருகிறது. இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேற அடுத்த இரண்டு போட்டிகளிலும் வென்றே தீரவேண்டும்.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் இங்கிலாந்து அணி நாளை இந்தியாவை எதிர்கொள்கிறது. இதுவரை 7 போட்டிகளில் ஆடியுள்ள இங்கிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய் முதல் மூன்று போட்டிகளில் மட்டுமே ஆடினார். பின்னர் காயம் காரணமாக அடுத்த நான்கு போட்டிகளிலும் அவர் களமிறங்கவில்லை. அந்த நான்கு போட்டிகளில் இரண்டு போட்டிகளில் இங்கிலாந்து அணி பரிதாபமாக தோல்வி அடைந்தது.
இந்நிலையில் இந்தியாவுடனான நாளைய போட்டியில் வென்றால் மீண்டும் அணிக்கு திரும்புகிறார் என இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மோர்கன் உறுதிப்படுத்தியுள்ளார். ஆனால் அதே சமயத்தில் இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் சோப்ரா ஆச்சர் விளையாடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியின் போதே இடுப்பு வலியின் காரணமாக ஆடுவாரா என சந்தேகிக்கப்பட்ட சோப்ரா ஆச்சர் கடைசி நேரத்தில் களமிறக்கப்பட்டார்.
அவருக்கு ஏற்பட்டுள்ள இந்த வலி இன்னும் பூரணமாக குணம் அடையவில்லை என தெரிகிறது. எனவே இன்று பயிற்சியின் போது ஒரு பந்தை மட்டுமே வீசி விட்டு சென்று விட்டார். இதனை தொடர்ந்து நாளை ஆட்டம் தூங்குவதற்கு முன் ஆர்ச்சரின் உடல்நிலை ஆராயப்பட்டு களமிறங்குவாரா இல்லையா என அறிவிக்கப்படும் என்று கேப்டன் இயான் மோர்கன் தெரிவித்துள்ளார். முக்கியமான தருணத்தில் இங்கிலாந்து அணிக்கு ஏற்பட்டுள்ள இந்த பின்னடைவால் ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.