மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கேப்டன் விஜயகாந்தின் இந்த பாடல் தான் ஜடேஜாவுக்கு ரொம்ப பிடிக்கும்.. சுவாரஸ்ய தகவலை பகிர்ந்த அஸ்வின்.!
இங்கிலாந்தின் சவுதாம்ப்டன் மைதானத்தில் இம்மாதம் 18 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை நடைப்பெறவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை இந்தியா அணி எதிர்கொள்ளவுள்ளது. இதற்காக இரு அணிகளும் பயங்கர பயிற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர். அதனை தொடர்ந்து
இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும் இந்திய அணி மோதவுள்ளது.
இந்த இரு தொடர்களுக்கான இந்திய அணியில், சுழற்பந்து வீச்சில் ஆல் ரவுண்டர்களான ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். சமீப காலமாக இருவரும் இந்திய அணியின் வெற்றிக்கு தூண்களாக இருந்து வருகின்றனர்.
கொரோனா காலம் தொடக்கத்தில் அஸ்வின் புதிதாக யூ டியூப் சானல் ஒன்றை ஆரம்பித்துள்ளார். அதில் தனது வாழ்வில் நிகழ்ந்த சில சுவாரஸ்ய நிகழ்வுகள் மற்றும்
மற்ற வீரர்கள், கிரிக்கெட் நிபுணர்களுடனும் நேர்காணல் நடத்தியும் வருகிறார். அந்த வகையில் ஜடேஜா பற்றிய சுவாரஸ்ய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதில் ஜடேஜா தமிழில் பாடலில் அதிகம் விரும்பி கேட்கும் பாடல் எது என்பதை கூறியுள்ளார். அது கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் வெளியான வானத்தை போல திரைப்படத்தில் எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை பாடல் தான் அது. அதன் பிறகு, அந்த திரைப்படம் பற்றியான தகவலை ஜடேஜா, என்னிடம் கேட்டுத் தெரிந்து கொண்டார்' என அஸ்வின் தெரிவித்துள்ளார்.