அடேங்கப்பா.. நடிகர் மாதவன் வாங்கியுள்ள காஸ்ட்லி சொகுசு படகு.! விலையை கேட்டு வாயை பிளந்த ரசிகர்கள்!!
இந்தியா- ஆஸ்திரேலியா 2-வது டெஸ்ட்.! முக்கிய வீரர்களை தட்டி தூக்கிய தமிழக வீரர்.! மிரண்டுபோன ஆஸ்திரேலியா.!
இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. தற்போது 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்த நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் இன்று தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதனையடுத்து ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரர்களாக ஜோ பர்ன்ஸ் மற்றும் மேத்யூ வேட் களமிறங்கினர். சிறப்பாக பந்துவீசிய இந்திய அணியின் பும்ரா ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரர் ஜோ பர்ன்ஸை டக் அவுட் ஆக்கினார். இதனையடுத்து இந்திய அணியின் தமிழக வீரர் அஸ்வின், மேத்யூ வேட் விக்கெட்டை வீழ்த்தினார். இதனையடுத்து ஆஸ்திரேலிய அணியில், மார்னஸ் லபுஸ்சேன் - ஸ்டீவன் சுமித் ஜோடி சேர்ந்தனர்.
ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஸ்டீவன் சுமித்தை டக் அவுட் ஆக்கினார் அஸ்வின். தற்போது ஆஸ்திரேலிய அணியில் டிராவிஸ் ஹெட் மற்றும் மார்னஸ் லபுஸ்சேன் ஆகிய இருவரும் ஆடிவருகின்றனர். தற்போதுவரை 35 ஓவர்கள் நிறைவுற்ற நிலையில், ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 90 ரன்கள் எடுத்து ஆடிவருகின்றனர். இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த அஸ்வின் இரண்டு விக்கெட்டுகளையும், பும்ரா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி சிறப்பாக பந்து வீசி வருகின்றனர்.