மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.! கெத்தாக இங்கிலாந்து சென்று இந்திய அணியுடன் இணைந்த தமிழக வீரர்.!
இந்திய அணி கடந்த ஆண்டு இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. 4 டெஸ்ட் போட்டிகள் முடிந்த நிலையில், கொரோனா காரணமாக கடைசி டெஸ்ட் போட்டி ஒத்திவைக்கப்பட்டது. இந்த தொடரில் முதல் போட்டி சமனில் முடிந்த நிலையில், இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இதனையடுத்து அந்த கடைசி டெஸ்ட் போட்டி மற்றும் 3 டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் சென்றுள்ளது. ரத்து செய்யப்பட்ட 5-வது டெஸ்ட் போட்டி வரும் ஜூலை 1-ஆம் தேதியன்று பர்மிங்காம் நகரில் துவங்குகிறது.
இந்த நிலையில் இந்திய அணி வீரர் அஸ்வின் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால் இந்த போட்டியில் அஸ்வின் விளையாடுவாரா என கேள்வி எழுந்தது. இந்நிலையில் அவரது குவாரண்டைன் காலம் முடிவடைந்துள்ளதை அடுத்து இங்கிலாந்துக்கு சென்று இந்திய அணியுடன் அஸ்வின் இணைந்துள்ளார்.