மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பந்து வீச்சிலும் நான் தான்.! பேட்டிங்கிலும் நான் தான்.! டெஸ்ட் போட்டியில் அசத்தும் தமிழக வீரர்.!
இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து முதல் இன்னிங்சில் இந்திய அணி 329 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
இந்திய அணியில் அதிகபட்சமாக ரோகித் சர்மா 161- ரன்களும் ரகானே 67- ரன்களையும் எடுத்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக மோயின் அலி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து, முதல் இன்னிங்சை துவங்கிய இங்கிலந்து அணி, அஸ்வினின் சிறப்பான பந்துவீச்சால் 59.5 ஓவர்கள் தாக்குப்பிடித்த இங்கிலாந்து அணி 134 ரன்களில் அணைத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அஸ்வின் மட்டும் 5 விக்கெட்டுகளை தட்டி தூக்கினார்.
இதனையடுத்து 195 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை துவங்கிய இந்திய அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் 18 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 54 ரன்கள் எடுத்தது. 3- ஆம் நாள் ஆட்டம் இன்று துவங்கிய நிலையில், இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். ஆனால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட்கோலி 62 ரன்களை எடுத்து அவுட் ஆனார்.
தற்போது 7-வது விக்கெட்டாக களமிறங்கிய அஸ்வின், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். தற்போது அஸ்வின் 63 ரன்களுடன் களத்தில் உள்ளார். பந்து வீச்சிலும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி தற்போது பேட்டிங்கிலும் அசத்தி வருகிறார் தமிழக வீரர் அஸ்வின். தற்போது இந்திய அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 220 ரன்கள் எடுத்தநிலையில் ஆடிவருகிறது. இங்கிலாந்து அணியை விட இந்திய அணி 415 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.