மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சென்னை அணிக்கு எதிராக வெறிகொண்டு விளையாடிய அஸ்வின்.! அவர் கூறிய காரணம்.!
ஐபிஎல் தொடரில் சிஎஸ்கேவுக்கு எதிராக வெறியோடு விளையாடிய ராஜஸ்தான் வீரர் அஸ்வின், பின்னர் வெற்றியை கொண்டாடினார். இதனால், அஸ்வினுக்கும், சிஎஸ்கேவுக்கும் ஏதேனும் பிரச்சினை உள்ளதோ என ரசிகர்கள் விமர்சித்து வந்தனர்.
இந்தநிலையில் அன்றைய போட்டியில் ஆக்ரோஷமாக விளையாட காரணம் குறித்து அஸ்வின் கூறுகையில், சிஎஸ்கே அணிக்கு எதிராக நான் பல ஆண்டு விளையாடி இருக்கிறேன். அப்படி இருக்கும் போது, நமது முன்னாள் அணிக்கு எதிராக விளையாடும் போது, இயல்பாகவே அவர்கள் முன் நாம் சிறப்பாக விளையாட வேண்டும் என்ற நினைப்பு வருவது சகஜம் தான்.
சிஎஸ்கேவை வீழ்த்தியது மகிழ்ச்சி தான், அதுவும் இல்லாமல் அன்று 2 புள்ளிகள் கிடைத்தால் நாங்கள் முதல் 2 இடத்தை பிடிக்க முடியும். அதை மனதில் வைத்து கொண்டு விளையாடினேன். கடைசி வரை நின்று ஆட வேண்டும் என நினைத்தேன், அது தான் அன்றைய போட்டியில் ஆக்ரோஷமாக விளையாட காரணம் என கூறியுள்ளார்.