மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
முதல் போட்டியில் சாமர்த்தியத்தால் வென்ற அஸ்வின் இரண்டாவது போட்டியில் கோட்டைவிட்ட கதை!
2019 ஐபிஎல் தொடர் கடந்த 23ஆம் தேதி முதல் துவங்கி ரசிகர்கள் ஆதரவுடன் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் நேற்று நடந்த போட்டியில் கொல்கத்தா அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாபை வீழ்த்தியது.
இந்த சீசனில் இதுவரை நடைபெற்றுள்ள ஆறு போட்டிகளில் கொல்கத்தா, சென்னை அணிகள் இரண்டு போட்டிகளில் வென்று முதல் இரண்டு இடங்களில் உள்ளன. டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகள் தலா ஒரு போட்டியில் வென்று அடத்த இரண்டு இடங்களை பிடித்துள்ளன.
இந்த தொடரின் நான்காவது போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்த்து. இந்த போட்டியில் அந்த அணியின் கேப்டன், ராஜஸ்தான் அணியின் அதிரடி ஆட்டக்காரர் பட்லரை அவுட்டாக்கிய மன்கட் முறை மிகப்பெரிய விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த போட்டியில் 185 ரன் இலக்கை நோக்கி சிறப்பாக ஆடிய ராஜஸ்தான் அணியின் பட்லர் அரைசதம் அடித்தார். அவர் 69 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 13 ஆவது ஓவரை வீசிய அஸ்வின் மிகவும் சாமர்த்தியமாக பந்து வீசுவதை திடீரென நிறுத்தி, கிரீஸை விட்டு வெளியேறிய பட்லரை ரன் அவுட் ஆக்கினார். அதன் பிறகு ஆட்டமே தலைகீழாக மாறி ராஜஸ்தான் அணி விக்கெட்டுகள் மளமளவென சரிந்து தோல்வியை சந்தித்தன.
முதல் போட்டியில் தனது சாமர்யத்தால் வென்ற அஸ்வின், நேற்று கொல்கத்தாவிற்கு எதிராக நடைபெற்ற போட்டியில் பந்துவீச்சின் போது செய்த மிகப்பெரிய தவறால் தோல்வியை சந்திக்க நேர்ந்தது. இந்த தோல்விக்கான முழு பொறுப்பையும் அஸ்வின் ஏற்றுக்கொண்டுள்ளார்.
பஞ்சாப் அணியின் சமி வீசிய 16 வது ஓவரின் இறுதி பந்தில் ரஸ்ஸல் போல்டானார். ஆனால் மைதானத்தின் இன்னர் சார்கிலில் 4 வீரர்கள் பீல்டிங் செய்வதற்கு பதில் மூன்று வீரர்கள் மட்டுமே நின்றதால் நடுவர்கள் நோபால் அறிவித்தனர். இதனால் ரஸ்ஸல் மீண்டும் பேட்டிங் செய்யும் வாய்ப்பை பெற்றார்.
அதுவரை வெறும் 6 ரன்களே எடுத்திருந்த ரஸ்ஸ்ல் அதன் பிறகு வெறும் 13 பந்தில் 45 ரன்கள் எடுத்தார். அதன்பிறகு ரஸ்ஸல் 5 சிகசர்களை விளாசினார். அணியின் எண்ணிக்கையும் 200 ரன்னை கடந்நது. கேப்டனாக அஸ்வின் பீல்டர்களை சரியாக நிறுத்தியிருந்தால் ரஸ்ஸல் அவுட்டாகியிருப்பார். கொல்கத்தா அணியையும் 200 ரன்கள் எடுக்காமல் கட்டுப்படுத்தி இருக்கலாம்.
கடைசியில் இமாலய இலக்கை துறத்திய பஞ்சாப் அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. அஸ்வின் மட்டும் அந்த தவறை செய்யாமல் இருந்திருந்தால் கொல்கத்தா அணி 30 ரன்கள் குறைவாகவே எடுத்திருக்கும், பஞ்சாப் அணியும் வென்றிருக்கும்.