மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வாவ் சூப்பர்...தமிழ் பெண்ணை மணக்கவிருக்கும் கிளென் மேக்ஸ்வெல்... வைரலாகும் திருமண பத்திரிக்கை.!
ஆஸ்திரேலியா வாழ் தமிழ் பெண்ணை திருமணம் செய்யவிருக்கும் பிரபல கிரிக்கெட் வீரர் கிளென் மேக்ஸ்வெல்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் கிளென் மேக்ஸ்வெல். IPL போட்டிகளில் பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார் கிளென் மேக்ஸ்வெல். கடந்த சீசனில் அபாரமாக விளையாடியதை அடுத்து அவரை ரூ.11 கோடிக்கு தக்க வைத்தது பெங்களூரு அணி.
கிளென் மேக்ஸ்வெல் ஆஸ்திரேலியாவில் வளர்ந்த தமிழகத்துப் பெண்ணான வினி ராமன் என்பவரை காதலித்து வந்தார். வினி ராமன் ஆஸ்திரேலியாவில் பார்மஸி படித்தவர். இவர்களுக்கு கடந்த 2020-ம் ஆண்டு இந்திய முறைப்படி நிச்சயதார்த்தம் நடந்தது.
பின்னர் கொரோனா அச்சுறுத்தல் மற்றும் தொடர் லக்டவுன் பிரச்சனைகளால் அவர்களது திருமணம் நடைப்பெறாமல் இருந்து வந்தது. இந்நிலையில் தற்போது அவர்களது திருமணம் வரும் மார்ச் 27ஆம் தேதி நடைப்பெற உள்ளதாக தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.
வினி ராமன் சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்த தமிழ் பெண் என்பதால், இவர்களது திருமண அழைப்பிதழ் தமிழ் முறைப்படி அச்சிடப்பட்டுள்ளது. தற்போது இந்த அழைப்பிதழ் இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள், மேக்ஸ்வெல் - வினி ராமன் ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.