மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இமாலய இலக்கை நிர்ணயித்த ஆஸ்திரேலியா.! போராடித் தோற்ற இந்தியா.!
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள், T20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. முதலில் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று முன்தினம் சிட்னியில் நடந்த முதலாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி சிட்னி மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து ஆஸ்திரேலியா அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கிய டேவிட் வார்னர் மற்றும் ஆரோன் பிஞ்ச் ஆகிய இருவரும் ஆரம்பத்திலிருந்து அதிரடியாக விளையாடினர். ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 389 ரன்கள் எடுத்தனர்.
அந்த அணியில் அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 64 பந்துகளில் 104 ரன்கள் எடுத்தார்.
இதனையடுத்து 390 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் துவக்க வீரர்கள் ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இந்திய அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 87 பந்துகளில் 89 ரன்கள் எடுத்தார். அடுத்ததாக கே.எல். ராகுல் 66 பந்துகளில் 76 ரன்கள் எடுத்தார்.
இந்திய அணி இறுதியில் விக்கெட்டுகளை மளமளவென பறிகொடுத்தது. இறுதியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 338 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இந்திய அணியை ஆஸ்திரேலியா 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.