காட்டு காட்டுனு காட்டிய ஆஸ்திரேலிய துவக்க வீரர்கள்.! மிரண்டுபோன இலங்கை அணி.!



austrelia won srilanka first T20

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 5 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. அதன்படி இரு அணிகளும் மோதும் முதல் டி20 கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது. நேற்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த்து.

இதனையடுத்து முதலில் களமிறங்கிய இலங்கை அணியின் துவக்க வீரர் குணாதிலகா 26 ரங்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த அசலங்கா சிறப்பாக ஆடினார். நிசாங்கா-அசலங்காவின் ஆட்டத்தினால் இலங்கை 12வது ஓவரிலேயே 100 ரன்களை எட்டியது. அதன்பின்னர் இலங்கை அணி  ஹேசல்வுட் மற்றும் ஸ்டார்க் ஆகியோரின் பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

இளநகை அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 128 ரன்களில் சுருண்டது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஹேசல்வுட் 4 விக்கெட்டுகளையும், ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும், கேன் ரிச்சர்டுசன் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இதனையடுத்து 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரர்கள் இருவரும் ஆரம்பத்தில் இருந்து அதிரடியாக ஆடினர். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 14 ஓவர்களிலேயே இலக்கை கடந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டேவிட் வார்னர் 70 ரன்களுடனும், ஆரோன் பின்ச் 61 ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.