மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தமிழகத்தை சேர்ந்த மாரியப்பனுக்கு விளையாட்டுத்துறையில் உயரிய விருதான கேல் ரத்னா விருது.!
கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற பாரா ஒலிம்பிக்கில், உயரம் தாண்டுதல் போட்டியில் அசத்திய தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன், தங்கப்பதக்கத்தோடு தாயகம் திரும்பினார். ஒட்டுமொத்த இந்தியாவே தமிழகத்தை திரும்பி பார்க்க வைத்த இந்த இளைஞனுக்கு, தற்போது ராஜுவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவித்து மத்திய அரசு கௌரவித்துள்ளது.
விளையாட்டுத்துறையில் சாதித்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு ஆண்டுதோறும் மத்திய அரசு ராஜீவ் கேல் ரத்னா, அர்ஜுனா விருதுகள் வழங்கி கவுரவித்து வருகிறது. இந்நிலையில் இன்று விருதுக்கான பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளது.
அதில் கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா, பாரா ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலு, டேபிள் டென்னிஸ் மணிகா பத்ரா, மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், ஹாக்கி வீராங்கன ராணி ஆகியோருக்கு ராஜீவ் கேல் ரத்னா விருதும், கிரிக்கெட் வீரர் இஷாந்த் சர்மா, வீராங்கனை தீப்தி சர்மா ஆகியோருக்கு அர்ஜுனா விருது வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.