மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
யாரும் செய்யாத புதிய வரலாற்று சாதனை.! பாகிஸ்தான் கேப்டன் புதிய சாதனை.!
வெஸ்ட் இண்டீஸ் அணி கடந்த டிசம்பர் மாதம் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. முதலில் நடைபெற்ற டி20 தொடரை பாகிஸ்தான் 3-0 என கைப்பற்றியது. கொரோனா பரவலால் ஒருநாள் தொடர் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் 1-0 என முன்னிலை வகிக்கிறது. நேற்றைய ஆட்டத்தில் பாபர் அசாம் 107 பந்துகளில் 103 ரன்கள் எடுத்தார்.
இதன்மூலம் புதிய உலகசாதனை ஒன்றை அவர் படைத்தார். அதாவது, அவர் ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக அடித்த மூன்றாவது சதம் இதுவாகும். இதற்கு முன் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இரண்டு சதங்கள் விளாசியிருந்தார். ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக மூன்று சதங்களை, இருமுறை விளாசிய முதல் வீரர் என்ற புதிய வரலாற்று சாதனையை பாபர் அசாம் படைத்துள்ளார்.